Friday, October 25, 2013

Photoshop மென்பொருளில் எவ்வாறு தமிழில் type செய்வது

  • வணக்கம் நண்பர்களே இந்த பகுதியில் எவ்வாறு photoshop மென்பொருளில் தமிழில் type செய்வது என்பதை பற்றி பார்ப்போம். அதாவது photoshop எனும் மென்பொருளில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது என்பதையும் அதை எவ்வாறு பயப்டுத்துவது என்பதையும் பற்றி பார்ப்போம்...!!!


  • கணிப்பொறிகளில் character  map என்று உள்ளது அதன் மூலம் தான் நாம் அழகிய எழுத்துருக்களை தட்டச்சு செய்ய முடியும். ஆனால் சாதாரண எழுத்துக்களை azhagi எனும் மென்பொருள் மூலமே தட்டச்சு செய்யலாம். அதில் தட்டச்சு செய்வது மிகவும் சுலபம்.
                                                             azhagi-Setup-download-link

  • சரி வாருங்கள் நேரடியாக கதைக்கே செல்வோம். முதலில் அழகி எனும் மென்பொருளை  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு சில வழிமுறைகளை பின்பற்றினால் போது மிகவும் சுலபம்....!!!
  • எப்பவும் போல ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்வோமோ அதே போல இதையும் இன்ஸ்டால் செய்து விடுங்கள். அதன் அமைப்பு கீழ்கண்டவாறு இருக்கும். 


  •  நீங்கள் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அவர்களே குறிப்பு கொடுத்திருப்பார்கள். அதன் படி நீங்கள் type செய்யவும். நீங்கள் type செய்யும் font ஸ்டைல் ஆனது saiIndra என்று இருக்கும். கீழ்க்கண்ட படத்தை பாருங்கள்.




·         இதை எப்படி photoshop மென்பொருளில் பயன்படுத்துவது:

  •         இப்போது நீங்கள் azhagi மென்பொருளில் type செய்தவற்றை copy செய்து இங்கு paste செய்யவும். இதில் தான் ஒரு trick நீங்கள் paste செய்யும் போது ¾Á¢Æ¢ø ±ýÉ¡ø ¾ð¼îÍ ¦ºö ÓÊÔõ  இது போன்று தோன்றும். இப்போது நீங்கள் font எனும் எழுத்துருவை மாற்ற வேண்டும்.


  •   ஏற்கனவே கூறியது போல saiindira, saiEmbad இது போன்ற font தேர்வு செய்யதால் போதும் நீங்கள் paste செய்தது ¾Á¢Æ¢ø ±ýÉ¡ø ¾ð¼îÍ ¦ºö ÓÊÔõ  இது போல தமிழில் தானாகவே மாறிவிடும். அவ்வளவு தான் முடிந்தது. சந்தேகம் இருந்தால் கீழ்கண்ட படத்தை காணவும்.  




(இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை நீங்கள் facebook மூலம் தொடர்பு கொள்ளலாம் ).


2 comments: